கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் உங்களது முகம் மிகவும் பொலிவிழந்து, சோர்வாக காணப்படும். இந்த கருவளையங்கள் உங்களது முகத்தின் அழகை கெடுத்து விடும் தன்மை கொண்டது. இந்த கருவளையங்கள், ஒரு சிலருக்கு மரபு ரீதியாக உருவாகலாம். உடலில் ஏதேனும் சத்து குறைபாடு இருந்தாலும் உண்டாகலாம். அல்லது இரவு தூங்காமல் இருப்பது, அதிக நேரம் கண் விழித்து படிப்பது, கணினி, செல்போன் போன்றவற்றை பார்ப்பது, மன அழுத்தம் போன்றவற்றினால் உண்டாகலாம். இதற்காக நீங்கள், வெறும் மேக்கப் மட்டும் செய்தால் போதாது. சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

வெள்ளரி
உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியில் உள்ள ஸ்டார்ச் கருவளையங்களுக்கு மிக நல்ல மருந்து. அவற்றை நறுக்கிய உடனேயே கண்களின் மேல் வைத்துக் கொண்டால்தான் பலன்
காய்கறிகள்
முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து, 5 மி.லி. கிளிசரினும் 5 மி.லி. எலுமிச்சைச் சாறும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.
உடனடி மாற்றத்திற்கு…
கார்போக அரிசி, கருஞ்சீரகத்தை தலா 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் நன்கு வேக வைக்கவும். அது ஆறியதும் அதில் 10 மி.லி. சுத்தமான பன்னீர் கலந்து, அப்படியே 3 மணி நேரம் வைக்கவும். பிறகு வடிகட்டி. பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்கவும். உடனடியாக ஒரு போட்டோ செஷனுக்கு தயாராக வேண்டும், வெளியே பார்ட்டிக்கு போக வேண்டும், கருவளையங்கள் தெரியக்கூடாது என நினைக்கும் போது இந்த சிகிச்சை இன்ஸ்டன்ட் பலன் தரும்.