எட்டு வருடத்திற்கு முன்னதாக தாம் வழமையாக செல்லும் ஆலயத்திற்கு சென்ற குசல் மென்டிஸ் ஜெபம் செய்து கண்ணை திறந்து பார்க்கும் போது ஒரு அழகிய யுவதியை காண்கிறார்.

அவர் பெயர் நிசேல் , பார்ப்பதற்கை துடிப்பாக அழகிய புன்னகையோடு ஆலயத்திற்குள் வந்த போது குசல் மென்டிஸின் தலைக்கு மேலே ” பல்ப்” வெளிச்சம்.
எப்படியோ அவளை பின் தொடர்ந்து தனது காதலை தெரிவித்த குசல் தனது காதலியை உண்மையாக நேசித்தார்.
அதனை தொடர்ந்து பல தடைகள் சோதனைகள் எல்லாவற்றையும் மீறி எட்டு வருடத்திற்கு முன்னர் எந்த ஆலயத்தில் அவரை முதலில் சந்தித்தாரோ அதே ஆலயத்தில் நிசேலை திருமணம் முடித்துள்ளார் குசல் மென்டிஸ் .
இந்நிலையில் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.