கந்தையா வாத்தியார் சின்னப்பிள்ளையாக இருந்த போது தனது தந்தையை இழந்தால் இவருக்கும் தாய்க்கும் துணையாக அம்மப்பா, அம்மம்மா இவர்களுடன் இருந்தார்கள். கந்தையா வாத்தியார் ஒவ்வொரு நாளும் இரவு அம்மப்பா கதை சொன்னால் தான் நித்திரை செய்வார் அப்படி ஒருநாள் அம்மப்பா சொன்ன கதை தான் இது.
ஒரு ஊரில் ஒரு பூனையும் நரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் பிரிய வேண்டியேற்பட்டது. நீண்ட நாட்களின் பின்னர் ஒரு நாள். கடற்கரையில் நரி நண்டு பிடிக்கக் காத்திருந்தது மிகவும் பசி வேறு சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆயிற்று. அந்த நேரம் பார்த்துப் பூனை அந்த வழியால் வந்தது நரியைக் கண்டது ஓடிச் சென்று நண்பா உன்னைக் கண்டு நீண்ட நாட்கள் ஆயிற்று. எங்கே போனாய் எப்படி இருக்கிறாய் என்று கேட்டது நரியும் தனது சோகக் கதையை சொல்லி முடித்தது “பசிக்குது ஏதாவது வழி சொல்” என்றது பூனை சொன்னது “நான் ஒரு அந்தணர் வீட்டின் மாடியில் கள்ளமாகத் தங்கியிருக்கிறேன் அங்கு அவர்கள் மடியில் வைத்திருக்கும் தயிர் நெய் போன்றவற்றை திருடி உண்பதால் இப்படி வடிவாக வந்துவிட்டேன் உனக்கும் வேண்டும் என்றால் வா” என்று சொல்லி நரியை அழைத்துப்போனது.
பசிக்கொடுமையால் நரி ஒன்றும் செய்ய முடியாது சென்றது ஒரு சிறிய ஓட்டை வழியே ஒரு மாதிரி மாடிக்குள் நுழைந்தது. பூனையும் உறியில் கிடந்த தயிரை சரித்துவிட நரி வயிறார உண்டது வயிறு நிரம்பி ஊதிப் போனது. சந்தோசமிகுதியால் பாட்டுப் பாடியது கீழே இருந்த அந்தணருக்கு நரியின் சத்தம் கேட்க மேலே தடியுடன் வந்தார் வயிறு ஊதியிருந்த நரிக்கு சிறிய ஓட்டையால் தப்பி செல்ல முடியவில்லை நல்ல அடி வாங்கியது பின்னர் ஒருவாரு மீண்டும் கடற்கரைவந்து சேர்ந்து அடி தாங்க முடியாமல் அழுது கொண்டிருந்தது அந்த வழியால் வந்த நாய் கேட்து என்ன நடந்தது என்று நரி தனக்கு நடந்த கதையைக் கூறிவிட்டு தத்துவம் சொன்னது.
“கூடாத கூட்டங்கள் (நட்பு )கூட வேண்டாம்
கூடினாலும் கூடங்கள் மாடங்கள் ஏற வேண்டாம்
ஏறினாலும் நாதங்கள் கீதங்கள் பட வேண்டாம்”
என்றது.
மீண்டும் சந்திக்க வருவார் கந்தையா வாத்தியார்
அரியாலையூர் யசிதீபன்