உருளைக்கிழங்கு முட்டை கட்லெட்
- தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு – 3 வேகவைத்தது
- பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
- தக்காளி – 1 நறுக்கியது
- பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது – 1/4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- சீரக தூள் – 1 தேக்கரண்டி
- தனியா தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- முட்டை – 2 வேகவைத்தது
- முட்டை – 1
- எண்ணெய்
- பிரட் தூள்

செய்முறை
1. வேகவைத்த உருளைக்கிழங்கை, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி, மசிக்கவும்.
2. இதில் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
3. வேகவைத்த முட்டையை நான்கு துண்டுகளாக நறுக்கவும்.
4. சிறிய கிண்ணத்தில், முட்டை உடைத்து ஊற்றி, அடித்து வைக்கவும்.
5. கையில் சிறிது எண்ணெய் தடவி, கிழங்கு கலவையில் முட்டை துண்டு வைத்து மூடவும்
.6. இதை 10 நிமிடம் பிரிட்ஜ்’ஜில் வைக்கவும்
.7. அகல பேன்’னில் எண்ணையை சூடாக்கி, கட்லெட்’டை போடவும்
.8. இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்