அண்மையில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் ஜெயசூரிய, இலங்கை அணியின் மூத்த வீரர் திசர பெரேரா மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

அதேவேளை, தனக்கு அணியில் போதிய வாய்ப்பு தரவில்லையென்றும் குற்றம்சாட்டியுள்ளார். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் திறமையை வெளிக்காட்டினாலும், அடுத்த ஆட்டத்திலேயே கழற்றி விடப்பட்டதாக தேர்வாளர்கள் மீது குற்றம்சுமத்தினார்.
காயம், அதிக எடை என காரணங்கள் கூறப்பட்டதாக தெரிவித்தார், ரி20 அணித்தலைவர் திசர பெரேராவும், அவரது மனைவியும் தனக்கும், மனைவிக்கும் எதிராக செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஒருமுறை டுபாயில் தானும் தசுன் சானக, கசுன் ராஜித ஆகியோருடன் ஒன்றாக உணவருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த திசர பெரேராவின் மனைவி, தன்னுடன் சேர வேண்டாமென கூறியதாகவும், தனக்கும் மத்யூசிற்குமிடையில் பிரச்சனையை உண்டாக்க முயன்றதாகவும் கூறினார்.
வீரர்கள் தங்குமிடத்தில் தனது மனைவியை அழைத்து சென்ற போது, திசர பெரேரா அணி நிர்வாகத்திடம் முறையிட்டதாகவும், திசர பெரேராவும் மனைவியும் எப்பொழுதும் எனது மனைவியையே தேடிக் கொண்டிருந்தார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்களிற்கு தனது பேஸ்புக்கில் திசர பெரேரா பதிலளித்துள்ளார்.
போட்டிகளின் போது நடக்கும் விடயங்களை ஊடகங்களின் முன்பாக பேசுவது ஏற்றுக்கொள்ளத்தக்க பாரம்பரியமல்ல எற்போதும், ஷெஹான் தகவறான தகவலை தெரிவித்ததால் விளக்கமளிக்கிறேன்.
டுபாயில் 2017 இல் நடந்த ஒரு தொடரிற்கு தலைமை தாங்கினேன். ஷெஹான் ஒரு குறிப்பிட்ட பெண்ணை (இப்பொழுது அவரது இரண்டாவது மனைவி) தொடரிற்கு அழைத்து சென்று, தனது அறையில் தங்க வைக்க அப்போதைய மேலாளரிடம் அனுமதி கோரப்பட்டது.
அவர் ஏற்கனவே திருமணமாகி, ஒரு பிள்ளையின் தந்தையென்பதால், அணித்தலைவராக- அணி ஒழுக்கத்தை பேண வேண்டுமென்பதால் அதை எதிர்த்தேன்.
அணியில் இருக்கும் போது அனைவரும் ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதை நான் கடுமையாக பேணினேன்.
அவர்கள் அப்போது ஒன்றாக தங்க அனுமதித்திருந்தால், இருக்கும் இன்று நான் ஹீரோவாக இருந்திருப்பேன்.
அப்படி செய்திருந்தால் புதியவர்களிற்கு தவறான முன்னுதாரணமாக அமைந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.