கிழங்கு வகைகளில் மிகவும் அதேசமயம் அதிக சத்துக்கள் நிறைந்த ஒன்று என்றால் அது சர்க்கரை வள்ளி கிழங்குதான். இதனை நாம் அதிகம் பார்த்திருந்தாலும் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தியிருக்கமாட்டோம். நாம் எந்த உணவையெல்லாம் சாப்பிடாமல் தவிர்க்கிறோமோ அவையெல்லாம் பெரும்பாலும் ஆரோக்கியமானதாகவே இருக்கும் அதற்கு சிறந்த உதாரணம் சர்க்கரை வள்ளி கிழங்குதான்.

சர்க்கரை வள்ளி கிழங்கு இதய பாதுகாப்பு, இரத்த சுத்திகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்தல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என பல நன்மைகளை வழங்குகிறது.
சர்க்கரை வள்ளி கிழங்கு பற்றி நீங்கள் அறியாத ஆரோக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்:
1. இதய ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் முக்கியமான சத்துப்பொருள் வைட்டமின் பி6 ஆகும். வைட்டமின் பி6 நம் உடலில் உற்பத்தியாகும் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய ஹோமோசயட்டின் என்ற நச்சுப்பொருளை குறைக்கும்.
2. வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். அது மட்டுமின்றி இது எலும்பை வலிமைப்படுத்துதல், செரிமானம், இரத்தத்தை சுத்திகரிப்பது போன்ற பணிகளையும் செய்கிறது.
3. நமது உடலுக்கு தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து எளிதாக கிடைக்கும். ஆனால் சிலசமயம் சூரிய ஒளியால் சில அலர்ஜிகள் ஏற்படலாம். எனவே அதுபோன்ற சமயத்தில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவது வைட்டமின் டி இழப்பை சரிசெய்யும். இதன்மூலம் நமது எலும்பு, பற்கள், நரம்புகள் போன்றவை வலுப்பெறும்.
4. சர்க்கரை வள்ளி கிழங்கில் இரும்புசத்து ஏராளமாக உள்ளது.
5. சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள மெக்னீசியம் மனஉளைச்சலை சரி செய்ய சிறந்த மருந்தாக இருக்கிறது.