பழங்காலம் முதலாக சிறந்த அழகு பராமரிப்பு பொருளாக சந்தனம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சந்தனத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளுடன், ப்ளீச்சிங் பொருட்களும் அடங்கியுள்ளது.
சந்தனம், பருக்கள், முகப்பரு மற்றும் புண்கள் ஆகியவற்றைத் தடுக்கின்ற ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஒருவரது சரும பிரச்சனைகளைப் போக்குவதோடு, சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவிபுரிகின்றது.
அந்தவகையில் சரும பிரச்சினைகளை சரி செய்ய சந்தனத்தை எப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.
- சந்தன எண்ணெய் ஒரு தேக்கரண்டி , மஞ்சள் மற்றும் கற்பூரம் ஒரு சிட்டிகை கலந்து. முகப்பரு மற்றும் பிளாக்ஹெட்ஸ் நீக்க இரவு முழுவதும் ஃபேஸ்பேக் போடுங்கள். அத்துடன் 1 தேக்கரண்டி சந்தன பவுடர், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சில எலுமிச்சை சாறுகளை ஒரு பசையாக தயாரித்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் முகத்தில் தடவி அரை மணி நேரம் விட்டு விடுங்கள். பின்னர், உலர்ந்த பின்பு இதமான சுடுத் தண்ணீரில் முகத்தைக் கழுவுங்கள்.
- சந்தன எண்ணெயை உங்கள் முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அதை விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் இதமான சுடுத் தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.
- ஒரு தேக்கரண்டி வெள்ளரிச் சாறு, ஒரு தேக்கரண்டி தயிர், தேன் ஒரு தேக்கரண்டி, சில எலுமிச்சை சாறு மற்றும் சந்தன பவுடர் ஒரு தேக்கரண்டி பயன்படுத்துங்கள். இந்த கலவையாலான ஃபேஸ் பாக்கை உங்கள் முகத்தில் தடவவும், சுமார் 15 நிமிடங்களுக்கு அதை விட்டு விடுங்கள். இது சூரியனால் ஏற்பட்ட கருமை மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது.
- 1 டீஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து அதை முகத்தில் தடவி மசாஜ் செய்து அதை இரவு முழுவதும் விட்டு விடுங்கள். தொடர்ந்து இதைப் பயன்பாடுத்துவதால், கரும் புள்ளிகள் மறைந்துவிடும்.
- சந்தன தூளை ரோஜா நீர் சில துளிகள் சேர்த்து கலந்து உங்கள் முகத்தில் தடவவும். அரை மணி நேரம் அதை விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.