சீனாவில் வுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை, கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியா உட்பட பல நாடுகளில் பரவியுள்ளது. பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாக, வைத்தியர் கிருஷ்திகா நாகேஸ்வரன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்தார்.
இது வரை ஒரு இலட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், இழப்புகளை தவிர்த்துக் கொள்ள நாம் ஏதுநிகைளை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஒரு வருடம் கடந்தும் அச்சுறுத்தும் கொரோனா – வீரியம் குறையாது பரவி வருகிறது.
புதிய வகை கொரோனா என்றால் என்ன?, அதன் தாக்கம் எவ்வாறானது?, தடுப்பூசியால் பாதிப்புகள் உண்டா? எனும் எம்முள் எழும் வினாக்களுக்கு பதிலாய் வருகிறது இக்காணொளி,