தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், ”எங்களைப் பற்றிய வதந்திகள் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக விளக்கமளிக்கிறோம்” என தெரிவித்துள்ளது. அதன் விவரம்:

- உங்களது மேசேஜ்கள், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசும் அழைப்புகளையும் வாட்ஸ் அப் பேஸ்புக் நிச்சயம் கண்காணிக்காது. எது பரிமாறப்பட்டாலும் அது உங்களுக்குள்ளானது மட்டுமே. அது உங்களுக்குள்ளேயே இருக்கும். end-to-end encryption முறையில் இருப்பதால் உங்கள் தகவல் பரிமாற்றத்துக்குள் யாராலும் தலையிட முடியாது.
- உங்கள் இருப்பிட தகவலை நீங்கள் யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், அது பாதுகாப்பாகவே இருக்கும். நீங்கள் அனுப்பிய நபரைத் தவிர வேறு யாருக்கும் உங்கள் இருப்பிட தகவல் செல்லாது.

- உங்களது காண்டக்டில் உள்ள செல்போன் எண்களை ஃபேஸ்புக்குடன் நாங்கள் பகிர்ந்துகொள்ள மாட்டோம். உங்களது குரூப் மெசேஜ்களும் பாதுகாப்பானதாகவே இருக்கும்
- உங்களது தகவல்களை நாங்கள் விளம்பர நோக்கத்திற்காக ஃபேஸ்புக்கிற்கு கொடுக்க மாட்டோம்
- எங்களுக்கு கோரிக்கை விடுத்தால் உங்களது வாட்ஸ் அப் விவரங்களை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். அந்த தகவல்களை தேவையானால் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம் அல்லது டெலிட் செய்து கொள்ளலாம்.