தேவையான பொருட்கள்
பாதாம் – 2 கப்
பால் – 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
குங்குமப்பூ பால்

செய்முறை
1. பாதாம் ஹல்வா செய்ய பாதாமை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும்
2. ஊறவைத்த பாதாமின் தோலை உரித்து மிக்ஸிசியில் சேர்த்து காய்ச்சி ஆறவைத்த பாலை சிறிது சிறிதாக ஊற்றி விழுதாக அரைக்கவும்
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அரைத்த பாதாம் விழுதை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் கிளறவும்
4. பாதாம் கலவையின் ஈரம் வற்றியவுடன் இதில் சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் சர்க்கரை கரையும் வரை கலக்கவும்
5. சர்க்கரை முழுவதும் கரைந்தவுடன் இதில் நெய் ஊற்றி நன்கு கிளறவும்
6. நெய் முழுவதும் கிளறிவுடன் பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறவும்
7. பாதாம் கலவை ஹல்வா பதம் வந்தவுடன் சிறிது நெய் விட்டு நன்கு கிளறவும்
8. சுவையான மற்றும் எளிமையான பாதாம் ஹல்வா தயார் நறுக்கிய பாதாம் பருப்பை அதன் மேல் தூவி பரிமாறவும்