வெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்டை வந்தடையவுள்ளது.குறித்த விமானம் நாளை அதிகாலை 2.15 அளவில் நாட்டை வந்தடையவுள்ளது.
Nivetha Editor
- மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்ளாதீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
- ரிஷபம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
- மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகூடும். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். வெற்றி பெறும் நாள்.
- கடகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
- சிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு , களை கட்டும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.
- கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நெருங்கியவர் சிலர் உங்களை உதாசீனப்படுத்திப் பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
- துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
- விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் ஆதாயம் உண்டு.வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய சொந்தம் தேடி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
- தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.
- மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
- கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
- மீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சித் தங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
சந்திரமுகி, பம்மல் கே.சம்பந்தம் ஆகிய படங்களில் நடித்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்
மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இவர் தமிழில் அஜித் நடித்த கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் படத்தில் நடித்தார். மேலும் பம்மல் கே.சம்பந்தம், சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரிசோதனையில் நெகட்டீவ் என வந்த போதிலும், அதற்கு பிறகு உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவால் அவர் இன்று (20.1.2021) இயற்கை எய்தியுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு தமிழ் மற்றும் மலையாள திரைத்துறையினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விநாயகருக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. கணபதி என்ற சொல்லுக்கு தேவகணங்களின் தலைவன் என்று பொருள். ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ‘ண’ என்பது மோட்சம் பெறுவதையும், ‘பதி’ என்பது ஞான நெறியில் திளைத்து பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் ‘மனோவாக்கினை கடந்த தலைவன்’ என்றும் பொருள் கொள்ளலாம். தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். விக்னங்களைப் போக்குபவர் ஆதலால் விக்னேஸ்வரர்.
சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இவனது துன்பம் தீர்க்க எண்ணிய விநாயக பெருமான், சந்திரனை தன் நெற்றியில் திலகமாக அணிந்து கொண்டாராம். இதனால், பாலசந்திர விநாயகர் எனும் திருநாமம் பெற்றார்.
ஒருமுறை, அக்னி பகவானும் சாபம் பெற்றார். அக்னியைக் காப்பாற்ற தனது காதுகளையே முறங்களாக்கி விசிறி, அக்னியின் வெப்பம் தணியாமல் இருக்க அருள் செய்தார் விக்னேஸ்வரர். இதனால் சூர்ப்பகர்ணர் என்று பெயர் கொண்டார். பரமேஸ் வரனால் வழங்கப்பட்ட பரசு ஆயுதத்தால் பூவுலகில் தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார் பரசுராமர். இதன் பொருட்டு சிவனாருக்கு நன்றி சொல்ல திருக்கயிலாயம் வந்தார். வாயிலில் அவரைத் தடுத்து நிறுத்தினார் பிள்ளையார். அவரை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயன்றார் பரசுராமர். இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதன் உச்சகட்டமாக. விநாயகரை நோக்கி பரசு ஆயுதத்தை வீசினார் பரசுராமன். அந்த ஆயுதத்தால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்பது பிள்ளையாருக்குத் தெரியும். ஆனால், தந்தை அளித்த அந்த ஆயுதத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதினார் பிள்ளையார்.
தமது இடது தந்தத்தால் அந்த ஆயுதத்தை எதிர்கொண்டார்.தந்தம் முறிந்தது. இதன் மூலம் ஏக தந்தர் எனும் திருநாமத்தை ஏற்றார். இப்படி பல்வேறு பெயர்களை கொண்ட விநாயகரை பிள்ளையார் என்று அழைக்க காரணம் அவர் பிள்ளை மனம் கொண்டவர் என்பது தான். பிள்ளையாரின் அவதார சம்பவத்தின் போது அவரை பார்த்து ரிஷி ஒருவர் பிள்ளையார் என்று கேட்டதால் அவருக்கு பிள்ளையார் என்று பெயர் வந்ததாகவும் பிரமாண்ட புராணம் கூறும் தகவல்கள். இவை தவிர, பல்வேறு தலங்களில் பல்வேறு காரணப்பெயர்களும் உண்டு.

புதனின் ஆதிக்கத்தில் பிறந்த கன்னிராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு இந்த வருடம் கிரக சஞ்சாரங்கள், பார்வை, சேர்க்கை ஆகியவற்றை பார்க்கும்போது நெருக்கடிகள், அலைச்சல் நீங்கும். உங்கள் நீண்டகால ஆசைகள், கனவுகள் நிறைவேறும். கடந்தகால அனுபவங்கள் உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும். உங்கள் யோகாதிபதியாகிய சனி சொந்தவீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வளர்ச்சி, யோகத்தை தருவார். வசதி குறைவான வாடகை வீட்டில் வசிப்பவர்கள் நல்ல வசதியான பிளாட்டிற்கு இடம் மாறுவீர்கள். தாய், தாய் மாமன், தாய்வழி உறவுகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
குருவின் திருவோண நட்சத்திர சஞ்சாரம் காரணமாக சுப விசேஷங்கள் தொடரும். கர்ப்பமாக இருக்கும் மகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படும். அதனால் மகிழ்ச்சியும், மன நிறையும் அடைவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக சமாதான தீர்வுக்கு வாய்ப்புள்ளது. இரண்டு தரப்பிலும் விட்டுக் கொடுத்து முடித்துக் கொள்வது உத்தமம். ராகு 9ல் இருப்பதால் நிறைகுறைகள் இருக்கும்.
விற்க முடியாமல் இருந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். கண்புரைக்கு சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். நெருங்கிய உறவுகளுடன் சேர்ந்து வெளி மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களுக்குச் சென்று தரிசிப்பீர்கள். பணப் பற்றாக்குறை காரணமாக பாதியில் நின்ற கட்டிட வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள். வெளியூரில் வேலை செய்பவர்கள் சொந்த ஊரில் போய் நிரந்தரமாகத் தங்குவதற்கான முடிவுகளை எடுப்பீர்கள்
பெண்கள்:
சனி யோக அம்சத்துடன் சஞ்சரிப்பதால் தாய்வீட்டில் இருந்து வந்த வருத்தங்கள் நீங்கும். சுப சௌபாக்கிய யோகம் உண்டாகும். பிறந்த வீட்டில் இருந்து வரவேண்டிய நகை, பணம் கைக்கு வரும். மகள் திருமண விஷயமாக நீங்கள் எதிர்பாராத வகையில் எல்லா விஷயங்களும் மளமளவென்று கூடிவரும். தூரத்து சொந்தத்திலேயே மணமகன் அமைவார். கேதுவின் அருளால் தடைப்பட்டு வந்த குலதெய்வ நேர்த்திக் கடன்களை மன நிறைவுடன் செய்து முடிப்பீர்கள். மத்திய அரசில் பணிபுரிபவர்களுக்கு திடீர் வெளிமாநில இட மாற்றம் இருக்கும். சனியின் பார்வை காரணமாக மன அழுத்தங்கள் தரக்கூடிய விஷயங்கள் உண்டாகும். கன்னிப் பெண்கள் பெற்றோர்களின் அறிவுரைகளை கேட்பது நலம் தரும்.
உத்யோகஸ்தர்கள்:
பாக்கிய ஸ்தான ராகு சில சங்கடங்கள், செலவுகள் நெருக்கடிகளை தருவார். அதே நேரத்தில் உத்யோக வகையில் சம்பள உயர்வு. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு வெளிமாநிலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பத்திரிகை துறையில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான நிலை இருக்கும். போட்டோ கிராபர்கள், நிருபர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். சனியின் பார்வை காரணமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை கைக்கு வரும். பகுதிநேர வேலைக்கு முயற்சித் தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் நிரந்தர வேலை அமையும். சித்திரை மாதத்திற்குள் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வரும் யோகம் உள்ளது.
அரசியல் – கலைத்துறை:
குரு, சனி உங்களுக்கு பதவி யோகத்தை தருவார்கள். மாவட்ட அளவில் முக்கிய பதவி கிடைக்கும். தொகுதியில் உங்கள் செல்வாக்கு உயரும். M.P, மந்திரிகளின் தொடர்பு காரணமாக வாரியம், கமிட்டி போன்ற வற்றில் பதவி கிடைக்கும். கோஷ்டிப் பிரச்னைகளை கடந்து வெற்றி நடை போடுவீர்கள். இசைத்துறையை சேர்ந்தவர்களுக்கு சாதகமான காற்று வீசும். விளம்பர படங்களில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்படுவீர்கள். கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு வானொலி, தொலைக்காட்சியில் இருந்து வாய்ப்புகள் கிடைக்கும். நகைச்சுவை கலைஞர்கள் நல்ல புகழ் அடைவார்கள். மூத்த கலைஞர்களின் சிபாரிசு, ஆதரவு கிடைக்கும்.
தொழில் – வியாபாரம் – விவசாயம்:
சனி, குரு அமைப்பு காரணமாக சாதகமான நிலை இருக்கும். ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் நல்ல முன்னேற்றம் அடையும். பேப்பர், அட்டை, ஸ்டேஷனரி, கல்யாண பத்திரிகை கார்டுகள், விளம்பர நிறுவனங்கள் மூலம் நல்ல லாபம் வரும். ராகு 9ல் இருப்பதால் எதிர்பாராத தன லாபத்திற்கு வாய்ப்புள்ளது. பங்கு வர்த்தகத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும். வெளியூர்களில் புதிய கிளைகள் தொடங்கும் யோகம் உள்ளது. வங்கியில் இருந்து பிப்ரவரி மாதத்திற்குள் எதிர்பார்த்த கடன் கைக்கு வரும். விவசாயம் சீராக இருக்கும். மரம் வெட்டும் காண்ட்ராக்ட்டில் நல்ல லாபம் பார்க்கலாம். குத்தகைக்கு எடுத்த தென்னந்தோப்பில் நல்ல வருமானம் வரும். அடமானத்தில் இருக்கும் நிலப்பத்திரத்தை மீட்பீர்கள். பூச் செடிகள், மரக்கன்றுகள், மூலிகை நாற்றுக்கள் போன்ற நர்சரி தொழில் லாபகரமாக நடக்கும். கிழங்கு வகை, எண்ணெய் வித்துக்கள் மூலம் நல்ல லாபம் வரும். புதிய டிராக்டர், பம்ப்செட், லாரி வாங்குவீர்கள். குத்தகை பாக்கிகள் குறித்த நேரத்தில் வசூலாகும்.
பரிகாரம்:
வாராகி அம்மனுக்கு வெண்தாமரை மலர் சாத்தி வணங்கலாம். திருவண்ணாமலை ரமணாஸ்ரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமம், யோகிராம் சுரத்குமார் ஆகியோர் ஆசிரமத்திற்கு சென்று தியானிக்கலாம். பாரம் சுமப்போர், கட்டிட தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவலாம்.

சூரியன் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு இந்த வருடம் கிரக சஞ்சாரங்கள், பார்வை, சேர்க்கை ஆகியவற்றை பார்க்கும்பொழுது தடைகள், மன உளைச்சல் நீங்கும். சனி 6ல் குருவுடன் இருப்பதால் யோக பாக்கியங்கள் கூடிவரும் நேரம் வந்துள்ளது. இந்த வருடம் உங்கள் வாழ்க்கையின் வசந்தகாலமாக இருக்கும். சித்திரை மாதம் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் பூர்வீகச் சொத்து சம்பந்தமாக பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும். அதிகம் கறாராக இருக்காமல் விட்டுக்கொடுத்து பேசி முடித்துக்கொள்வது உத்தமம்.
சகோதரி மகள் திருமண விஷயமாக தாய்மாமன் வரிசை, சீர், மொய்ப்பணம் எனச் செலவுகள் உண்டாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பொறாமைப்படுவார்கள். பொசுங்கிப் போவார்கள். சனி 6ல் இருப்பது லட்சுமி யோகமாகும். பொருளாதாரப் பிரச்னைகள், பணப் பிரச்னைகள் உருட்டல், புரட்டல் விவகாரங்கள் எல்லாம் முடிவுக்கு வரும். கேது 4-ல் இருப்பதால் சதா அலைச்சல், பயணங்கள் இருக்கும். தாயார் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவரவர் வயதிற்கேற்ப உடல்நலத்தில் குறைபாடுகள் ஏற்படும். வாய்வு, அஜீரணக் கோளாறுகள் வரலாம்.
B.P. அதிகரிக்க வாய்ப்புள்ளது. பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். குருவின் பார்வை காரணமாக பாதியில் நிற்கும் கட்டிட வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள். நண்பர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். நண்பர்களிடையே நட்பில் விரிசல்கள் வரவாய்ப்புள்ளது. குருவின் அவிட்ட நட்சத்திர சஞ்சாரம் உங்களுக்கு எல்லா வகையிலும் லாபகரமாக அமையும். கௌரவ பதவிகள் தேடி வரும்.
பெண்கள் :
குரு, சனி பலமாக இருப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். கணவர் வீட்டில் இருந்து வரவேண்டிய பாகப்பிரிவினை சொத்து கைக்கு வரும். பெற்றோர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதால் அலைச்சல், மருத்துவச் செலவுகள் வந்து போகும். கணவரின் தொழில் விருத்தியடையும். உங்கள் பெயரில் புதிய தொழில் தொடங்கும் யோகம் உள்ளது. வெளிநாட்டில் இருக்கும் மகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி கிடைக்கும். அதனால் அயல்நாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தாய்வழி உறவுகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். பணம் கொடுப்பது, வாங்குவது சம்பந்தமாக கருத்து வேறுபாடுகள் வரலாம். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சித்திரை மாதத்திற்குள் வரும். கேது அமைப்பு காரணமாக வயிறு, பித்தப்பை கல் பிரச்னைகள் வரலாம்.
உத்யோகஸ்தர்கள்:
ஆறாம் இடத்தில் குரு, சனி இருப்பதால் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிறந்த ஊர், வசிக்கும் ஊரில் இருந்து வெளிமாநிலம், வெளிநாடு செல்ல வேண்டியது இருக்கும். லோன் சம்பந்தமாக விண்ணப்பித்தவர்களுக்கு மாசி மாதம் லோன் பணம் கைக்கு வரும். விருப்ப ஓய்வு பெற்று வேறு வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு பங்குனி மாதம் கிடைக்கும்.
அரசியல்-கலைத்துறை :
செல்வாக்கு உயரும். தொட்டது துலங்கும். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கட்சி அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்களை தலைமை ஏற்றுச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சித்திரை மாதத்திற்குள் எதிர்பாராத பதவியில் அமரும் யோகம் உள்ளது. மாநில அளவில் உங்கள் கை ஓங்கும். எதிர் அணியில் இருக்கும் செல்வாக்குமிக்க பிரமுகர் உங்கள் அணியில் வந்து இணைவார். கலைத்துறையினருக்கு சாதகமான ஆண்டாக அமையும். பாதியில் நின்ற படப்பிடிப்புக்கள் மீண்டும் தொடங்கும். ஸ்டண்ட் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். சின்னத்திரையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்படுவீர்கள். பட்டிமண்டப பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கும்.
தொழில்-வியாபாரம்-விவசாயம்:
குரு, சனி, அமைப்பு காரணமாக சாதகமான நிலை இருக்கும். புதிய முதலீடுகள், ஏஜென்சிகள், ஸ்டாக்கிஸ்டுகள், டீலர்ஷிப் எடுத்து வியாபாரத்தை பெருக்குவீர்கள். குருவின் அருளால் கையில் பணம் புரளும். கொடுக்கல், வாங்கல் ஸ்திரமாக நடக்கும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். ரெடிமேட் ஆடைகள், பேன்சி ஸ்டோர், பெண்கள் உள்ளாடைகள், வாசனைத் திரவியங்கள், வெள்ளி, தங்கம், இமிடேஷன் நகைகள் வியாபாரம் கை கொடுக்கும். பில்டிங் காண்ட்ராக்ட், மின்சார வேலைகள், பெயிண்டிங், கார்பெண்டர், உள் அலங்காரம் சம்பந்தமான தொழிலில் லாபம் வரும். விவசாயம் சீராக இருக்கும். புதிய தோட்டம், தோப்பு, எஸ்டேட் வாங்கும் யோகம் உள்ளது. கரும்பு, மஞ்சள், சோளம் கைகொடுக்கும். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விளைச்சலை பெருக்குவீர்கள். ஊடுபயிர் விவசாயம் கூடுதல் வருமானத்தை தரும். கிணற்றில் தண்ணீர் வற்றாமல் ஊற்று பெருக்கெடுக்கும்.
பரிகாரம்:
சரபேஸ்வரருக்கு வில்வ மாலை சாத்தி வழிபடலாம். பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணி அம்மனை தரிசிக்கலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஆடை, போர்வை தானம் தரலாம்
முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் வழிபாட்டிடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக சைவ ஆதீனங்கள் கவலை
இலங்கையில் தொடர்ச்சியாக சைவ மக்களின் வழிபாட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் வரிசையில் அண்மையில் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி சிவன் வழிபாட்டிடம் ஆக்கிரமிக்கப்பட்டு பெளத்தர்களே வசிக்காத பிரதேசத்தில் புத்த பிரான் சிலை வைக்கப்பட்டு உள்ளூர் சைவ மக்களின் வழிபாடுகள் மறுக்கப்பட்டு இருப்பது மனதிற்கு வேதனை தருகின்றது.
ஏற்கனவே திருகோணமலையின் கன்னியா , மன்னார் திருக்கேதீச்சரம், வவுனியா வெடுக்குநாறி மலை, முல்லைத்தீவு செம்மலை ஆகிய இடங்களில் மிகப் புராதன சைவ வழிபாட்டிடங்களில் இவ்வாறான பிரச்சனைகள் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது குருந்தூர் மலையில் தோற்றுவிக்கப்பட்டு இருக்கும் ஆக்கிரமிப்புக்கள், ஆதி சிவ வழிபாடுகளிற்கான ஊறுபாடுகள் சைவத் தமிழ் மக்களின் மனங்களில் ஆறா வடுவை உருவாக்கி மத நல்லிணக்கத்திற்கு பெரும் பங்கம் விளைவிக்கும் செயற்பாடாகும். சைவம் அன்பே சிவம் எனும் உயரிய தத்துவத்தை சுமந்து அனைத்து மக்கள் குழுமத்துடனும் அன்பு வழியில் சகோதரத்துவத்தை பேணும் தமிழர்களினுடைய ஆதி நெறியாகும்.
பெளத்தமும் புத்த பிரானால் உருவாக்கப்பட்ட அன்பு நெறி என்ற அடிப்படையில் பெளத்த குருமார்களும் அரசியல் தலைவர்களும் எம்மிடையே முரண்பாட்டை மேலும் ஆழமாக்கும் இச் செயற்பாடுகளிற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும்.பல பெளத்த குருமார்கள் மத நல்லிணக்கத்திற்காக நலிவுற்ற மக்களின் பிரச்சனைகளிற்காக குரல் கொடுத்து வருவதை நாம் அறிவோம்.
இந்த சந்தர்ப்பத்திலே அக்குரல்கள் மேலும் ஒங்கி ஒலிக்க வேண்டும் என்பதே எமது பேராவாகும். உலகம் முழுமையும் கொடிய நோயின் தாக்கத்திற்கு உட்பட்டு அவலத்தை முடக்கத்தை சந்தித்து வரும் நிலையில் எம்மிடையே மீண்டும் மீண்டும் தோற்றுவிக்கப்படும் முரண்பாடுகள் எம் அனைவரது சமாதான சகவாழ்வையும் பாதிக்கும் எனும் உண்மையை மனங்கொள்வோம்.
அழகிய இத் தீவிலே ஒவ்வொரு மத நெறியையும் மற்றவர் மதித்து அந்தந்த பிரதேசங்களின் பூர்வீக சமயப் பண்பாடுகள் வழிபாட்டிங்கள் தொடர்ந்து பேணுதலையும் ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படுத்தலையும் உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அனைவரும் குறிப்பாக பௌத்த மத குருமார்கள் முன்னின்று உழைக்க வேண்டுகின்றோம்.
சீனாவில் அடுத்தகட்ட சாதனை யாக அதிவேக மிதக்கும் ரயிலை அறிமுகம் செய்துள்ளனர். காந்த இயக்கவியல் அடிப்படையில் இயங்கும் இந்த ரயில் மணிக்கு 620 கி.மீ வேகத்தில் பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு ஜியோ தாங் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் இந்த ரயிலை வடிவமைத்துள்ளனர்.உயர் வெப்ப high temperature superconducting தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ரயில் தாண்டவாளங்களில் தொட்டுச்செல்லாமல் மிதந்தபடி அதிவேகமாகப் பயணிக்கக் கூடியது.
இந்த ரயிலில் சக்கரங்கள் இல்லாததால் உராய்வு மிகவும் குறைவாகவே இருக்கும். காந்தமயப்படுத்தப்பட்ட தாண்ட வாளத்தின் மீது இந்த ரயில் காற்றில் மிதந்தபடி வேகமாகப் பயணிக்கும். தற்போது இதன் 69 அடி நீள மாதிரியை அறிமுகப்படுத்தி உள்ள ஆராய்ச்சியாளர்கள், அடுத்த மூன்று முதல் 10 ஆண்டுகளுக்குள் இது முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனக் கூறியுள்ளார்கள்.
இந்த ரயில் மணிக்கு 620 கிமீ வேகத்தி பயணிக்கக் கூடியது. இதன் மூலம் பயணித்தால் லண்டனிலிருந்து பாரீஸுக்கு 47 நிமிடங்களில் போய்விடலாம்.இந்நிலையில் மேலும் இந்த ரயிலை மணிக்கு 800 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கும் முயற்சிகளையும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
விமான நிலையங்கள் நாளை திறக்கப்படுகின்றன- அனைத்து நாட்டு விமானங்களும் வரலாம்
நாளை (21) முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன இதற்காக சகல ஒழங்கமைப்புக்களும் நிறைவடைந்துள்ளன. என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் ஆம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. எனினும், முதற்கட்டமாக அண்மைய சில நாட்களாக யுக்ரைனில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கான சட்டத்திட்டங்கள் தளர்த்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாட்டுக்கு பிரவேசிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணிகள் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுநோய்களின் போது ஏழு பயணிகள் விமானங்கள் மட்டுமே இலங்கைக்கு பறந்தன என கூறினார். நாளை முதல் எந்தவொரு பயணிகள் விமானமும் இலங்கைக்கு வர முடியும், அதே நேரத்தில் தனியார் ஜெட் விமானங்களும் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர முடியும்.